வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகள்
- A – பதிவேடு – இது இரண்டு பிரதிகள் இருக்கும் பதிவேடு. ஒன்று விஏஓ அலுவலகத்திலும், மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்திலும் இருக்கும்.
இந்த பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் சர்வே எண், உட்பிரிவு மாறுதல், நில ஒப்படை, நில மாற்றம் சம்மந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும், விஏஓ அலுவலக பிரதியிலும் வட்டாட்சியரால் பதியப்பட வேண்டும்.
- B – பதிவேடு : பழைய இனாம் எஸ்டேட் நிலங்கள் பற்றிய விவரங்களை அறிய உதவும். அதாவது 1963 க்கு முன்பு உள்ள கிராம கணக்கு விபரங்களை அறியலாம்.
- B1 – பதிவேடு : தேவதாசிகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள், ஜமீன் சமய கொடைகள், அறக்கொடைகள், கிராம பணிக் கொடைகள் மற்றும் பலவிதமான கொடை அளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள் இருக்கும்.
- C – பதிவேடு : குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
- D – பதிவேடு : தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்
- F – பதிவேடு : நில உரிமையை அரசின் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றிய நிலங்கள் குறித்த விபரங்கள் இருக்கும்.
- G – பதிவேடு : வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசுக்கு வந்து சேர்ந்த நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
இவற்றில் B மற்றும் B1 பதிவேடுகள் தற்போது பராமரிக்கப்படவில்லை. ஆனால் இனாம் மற்றும் ஜமீன் சொத்துக்களை இந்த பதிவேடுகள் மூலம் அறியலாம்.
நன்றி…!|
Leave a Comment