அடிப்படை சட்ட விழிப்புணர்வு துளிகள்
விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து, காவல் அலுவலர்கள் பொதுமக்களை அடிக்கலாமா?
காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா??….
அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??
காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.
குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.
IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீருதல்.
IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.
IPC – 321 : தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 322 : தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.
IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.
IPC – 307 : கொலை முயற்சி.
மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நன்றி…
Leave a Comment