ஆழ் துளை கிணறு குறித்த சட்டம்
2012 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த பிறகு, குழந்தை இறந்த பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதன்பிறகு சிவகாமி எனும் சட்டம் பயின்று கொண்டிருந்த மாணவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு (Writ Petition No.27912 of 2013) ( Prayer of the Writ Petition is ” to formulateGuidelines/Ordinance/Act to regulate management of erection of borewells”) தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆழ்துளை கிணறுக்காண சட்டத்தை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றி, கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூபாய் ஒரு லட்சத்தை உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும்.
அத்தொகையை ஆழ்துளை கிணறை சரியாக பராமரிக்காத நபரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு அந்த பொதுநல வழக்கு முடித்து வைத்தது.
அதன்பிறகு, TAMIL NADU PANCHAYATS (REGULATION OF SINKING OF WELLS AND SAFETY MEASURES) RULES, 2015 சட்டங்கள் 18.02.2015 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி,
இச் சட்டத்தின் கீழான பாதுகாப்பு நெறிமுறைகள்;…..
ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர்,
அல்லது கிணருக்கான உரிமையாளர்,
கிணறு புதிதாக தோண்டும் போதும்,
அல்லது ஆழப்படுத்தும் போதும்,
அல்லது சீரமைக்கும் போதும்,
கீழ்க்கண்ட பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
1.A. கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
B. வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
C. கிணறு தோண்டும் பணியை சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வு பெறும் வேளையிலோ அந்தக் கிணறு மூடி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
D. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு தரை வரை சமதளமாக கண்டிப்பாக மூடிவிடவேண்டும்
2.a. ஆழ்துளை கிணறு வெட்டும் போதும் ஆழப்படுத்தும் போதும் சீரமைக்கும் போதும், மேற்படி நடைமுறைகள் பேணப்பட வேண்டும்
- கிணற்றின் உரிமையாளர் கிணறு வெட்டுவதற்கு முன்பு படிவம்-B வைத்துள்ளார் என்பதை உறுதி செய்ய வேண்டும்
2.கிணறு வெட்டும் போது, வெட்டப்பட விருக்கும் ஆழ்துளை கிணற்றின் நீளம், அகலம் நிலத்தின் உரிமையாளர் அவரது முகவரி ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தகுந்த முன்னெச்சரிக்கை பதாகைகள், தட்டிகள் வைக்க வேண்டும்
- நிலத்திற்கு ஏற்றார்போல் மேற்படி கிணற்றைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைத்தல் வேண்டும்
- 0.5×0.5×0.6 மீட்டர் அளவிலான சிமெண்ட் மேடை கிணற்றைச் சுற்றி அமைத்திட வேண்டும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு கீழும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு மேலும் மேடை அமைத்திட வேண்டும்
b. எக்காரணம் கொண்டும் இடைவேளை நேரத்தில், திறந்த கிணற்றை விட்டு பணியாளர்கள் விலகிச் செல்லக் கூடாது
C. கிணறு தோண்டிய பிறகு,
- சேறு உள்ள பகுதி அனைத்தையும், கால்வாய்களை பாதுகாப்பாக மூடி விட வேண்டும்.
- ஏற்கனவே நிலம் எப்படி இருந்ததோ அதே மாதிரி மீண்டும் செய்திடல் வேண்டும்
- இரும்பு மூடி மூலம், வெல்டிங் செய்து உறுதியான மூடியை போல்ட் மட்டும் நட் (Bolt and Nut) மூலமாக ஆழ்துளை கிணற்றின் வாயை மூடி பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.*
- உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மேற்படி ஆள்துளை கிணற்றின் பணி சரியாக செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும், மேற்படி பணியில் திருப்தி இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து, மீண்டும் மேற்படி கிணற்றில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். மேற்படி பாதுகாப்பு விஷயத்தில் நிலத்தின் உரிமையாளர் மேற்படி நிபந்தனைகளை முறையாக கடை பிடிக்க வில்லை எனில், உரிமத்தை ரத்து செய்யலாம்….
இதனையும் தாண்டி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 304-II படி நிலத்தின்/கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்யலாம்.
நன்றி…
Leave a Comment