புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…?
அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்
யாவை…?
நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…?
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…!
- அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ?
அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா?
அல்லது
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா ?
அல்லது
அரசு நிலத்தை பயிர் செய்து கொண்டு இருக்கீர்களா ?
அப்படி இருப்பவரகள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை .
- சென்னை புறநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டு பல வருடங்களாக மக்கள் வசித்து வந்த பிறகு அதனை வேறு நபருக்கு விற்று விடுகின்றனர் . அவர்களும் வெறும் ரூ.100 அல்லது அதற்கும் குறைவான முத்திரைகளில் சார்பதிவகத்தில் பதிவு கிரயம் எழுதி கொடுகின்றனர்.
- அப்படி வாங்கியவர்களை கேட்டால் புறம்போக்கு இடம் வாங்கி இருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அரசின் பார்வையில் அது .வாங்குதல்(Purchasing)… இல்லை ஆக்ரமணம் தான் (Enchrochment).
- ஆக்கிரமிப்புகள் தற்காலிகமானதாகவும் அல்லது நிலையானதாகவும் இருந்தாலும் அரசு அதற்கு ஆட்சேபனை அற்றவை என்று வகைபடுத்தி வைத்து இருந்தால் அதற்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம் . வீடுகள் இல்லாத மக்கள் , விவசாய நிலங்கள் இல்லாத மக்கள் , நிச்சயம் ஒப்படை பட்டா கேட்டு மனு செய்யலாம் .
- பட்டா கொடுக்க முடியாது என்று அரசு சொன்னாலும் ஆக்கிரமிப்புக்கு அபராதம் விதிக்காது, சாதாரண தீர்வை மட்டும் போடும் . பெரும்பாலும் சங்கம் அல்லது அமைப்பு வைத்து அரசின் முறையாக பின் தொடர்ந்து கள பணிகளை செய்தால் ஒப்படை பட்டா பெறலாம்.
- சென்னை புறநகர் பகுதிகளில் இப்படி ஒற்றுமையுடன் அரசிடம் மனு செய்து ஒப்படை பட்டா பெற்றுள்ளனர். அரசு மக்களின் தேவையை உணரும் பட்சத்தில் மேற்படி, நிலங்கள் தேவைபடாத பட்சத்தில் நிலை ஆணைகளின் படி உள்ள விதிமுறைகளை அனுசரித்து ஒப்படை செய்யும்.
- மண்பாண்டம் தொழில் செய்பவர்கள், இருளர்கள், ஒட்டர்கள் போன்ற சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பலர் அரசு புறம்போக்கில் ஆக்கிரமனத்தில் தான் இருக்கிறார்கள். கிராம நிர்வாக அதிகாரி பயிர் பதிவேடு எழுத கிராமத்தை பார்வையிட வரும் போது மேற்படி ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு “B” மேமோ கொடுக்கலாம் . அதனை வைத்து அரசுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ஒப்படை கொடுக்கலாம். இதனை VAO வே முன்னெடுத்து செய்யலாம்.
- ஆக்கிரமிப்புகள் தற்காலிகமாகவோ , நிரந்தரமாகவோ இருந்து அரசு உடனே ஆட்சேபிக்கின்ற வகையில் இருந்தால் அந்த இடங்கள் அரசுக்கு உடனே தேவைபடுகிறது என்கிற வகையில் வேகமாக ஆக்கிரமிப்பை அப்புறபடுத்துவார்கள்.DRO அளவில் ஆன அதிகாரிகள் நேரிடையாக வந்து களப்பணி ஆற்றும் சூழலில் ஆக்கிரமிப்பு அற்றுதலில் நிற்பார்கள்.
- நீங்கள் ஒரு ஆக்கீரமிப்பில் வைத்து இருக்கீர்கள்! அரசு அதனை அப்புறபடுத்த முன்மொழிவு கேட்டால் கொடுத்து காலி செய்ய கெடு வைத்து விட்டது, நீதி மன்றம் போய் தடை உத்தரவு வாங்க முடியும் என்றால் நிச்சயம் முடியாது.
அந்த சட்டத்தோட டிசைன் அப்படி . சிவில் நீதிமன்றங்கள் அரசு ஆக்கீரமிப்பு அகற்ற அவை தடை செய்ய முடியாது . உயர் நீதி மன்றம் , உச்ச நீதிமன்றம், தேவைபட்டால் தலையிடலாம் . ஆனால் பல தீர்ப்புகள் அரசு ஆக்கீரமிப்புகளுக்கு ஆதரவாகவே வந்து இருக்கிறது. ஆனால் அப்பாவி மக்கள் என்றால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி தற்காலிக தடை வேண்டுமானால் தருவார்கள்.
- ஆட்சேபனை ஆக்கீரமிப்புகளை நீக்க நில ஆக்கீரமிப்பு சட்டம் 1905 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நோட்டிஸ் கொடுத்து ஆக்கீரமிப்பில் உள்ள விஸ்தீரணம் , செலுத்த வேண்டிய தொகை இருக்கும் . இவையெல்லாம் நெடுஞ்சாலைத்துறை , பொதுபணிதுறை , வனத்துறை, ஆக்கீரமிப்புகளுக்கு வருவாய் துறையினர் தேவையில்லை. அவர்களே ஆக்கீரமிப்பு அகற்றும் நோட்டிஸ் கொடுக்கலாம்.
- உள்ளாட்சி அமைப்புகள் சொந்தமான நிலங்களை அவர்களே அகற்றி கொள்ளலாம். ராணுவம், ரயில்வே, துறைமுக நிலங்களை, ஆக்கீரமிப்பு அகற்ற மேற்படி துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு சொன்னவுடன் மாவட்ட ஆட்சியர் ஆக்கீரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.
- 1976 இல் ஒரு பொது இட அங்கீகரிக்கபடாத ஆக்கீரமிப்பாளர்கள் அப்புறபடுத்தும் சட்டம் , ஒன்று பெருநகர் பகுதிகளில் ஆக்கீரமிப்புகளை அகற்ற வைத்து இருக்கிறார்கள் , கால அவகாசம் , முன்னறிவிப்பு, கால கெடுவெல்லாம், பெருமளவு இந்த சட்டத்தின் கிடையாது.
- ஆக்கீரமிப்பு அகற்றும் தொடர்பாக அரசு முன்மொழிவு நோட்டிஸ் கொடுத்து விட்டார்கள் , கொடுத்து ஒரு வருடமாக ஆக்கீரமிப்பை எடுக்க வரவில்லை, என்றால் சந்தோஷ பட வேண்டாம். தலைக்கு கீழ் கத்தி தொங்க விட்டுவிட்டு எத்தனை வருடம் வேண்டுமானாலும் கழித்து ஆக்கீரமிப்பு அகற்ற வரலாம் , ஏற்கனவே கொடுத்த நோட்டீஸ் செல்லும் காலவதி தேதி எல்லாம் அதற்கு கிடையாது.
- அரசு புறம்போக்கு நிலங்களை அங்கு புழங்கும் வார்த்தைகளை கொண்டே….. ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலமா…?
ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலமா……
என்று வகைபடுத்தலாம்.
- ஆட்சேபனை உள்ளது என்பது அரசிடம் இருந்து பட்டா வாங்குவது கடினம் . கொஞ்சம் மெனக்கெடனும், வாங்க முடியாமல் கூட போய்விடும். ஆட்சேபனை அற்றவை என்பதை வரன்முறை செய்து பட்டா வழங்கலாம் , அப்படி பட்டா வழங்கும் போது குறிப்பிட்ட சதுர அடிக்கு மட்டும் இலவச பட்டாவும், அதை தாண்டி அதிகமாக இருப்பதற்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அரசு விலை நிர்ணயித்து தொகை பெற்று கொள்ளும்.
- முதலில் ஆட்சேபனை அற்றவைகளை பார்ப்போம்…
நந்தவனம்v
அனாதீனம்.v
தண்ணீர் பந்தல்v
மண்டபம்,v
மானாவாரி தரிசு,v
சர்வே செய்யப்படாத இடங்கள்,v
சாவடி,v
நத்தம்,v
கலவை,v
PWD.v
தோப்பு,v
தீர்வை விதிக்க பட்ட மானாவாரி தரிசு,v
COMPOSED PIT,v
மலை… / HiLLv
கல்லாங்குத்துv
காடு/பாறை,v
மேடுபள்ளம் ,v
குவாரி,v
திடல்,v
மைதானம்.v
வெட்டுகுழிv
- ஆட்சேபனை உள்ள நிலங்கள் :
தெரு,v
மயானம்/ சுடுகாடு,v
வண்டிபாட்டை ,v
FOREST marginv
ஹைவேv
FOREST MORSIN,v
மந்தை வெளி,v
கோவில்v
சாலை,v
நடைபாதை,v
கார்ப்பரேசன்,v
பஞ்சாயத்து ரோடு,v
NH ரோடு,v
RESERVE FOREST,v
- ஆட்சேபனை உள்ள நீர்நிலைகள் :
கெனால்,v
ஏந்தல்v
ஏரி,v
ஏரிக்கரை,v
இட்டேரிv
குட்டை,v
குளம்,v
நீர்பிடி,v
ஊருணி,v
ஓடை,v
ரிசர்வாயற் /அணை,v
ஆறு,v
வாய்க்கால்,v
வாரி,v
ஐயா ஓடை வெல்லவாரியில் ரோடு போட முடியுமா
அய்யா வணக்கம்.
1976-ஆம் ஆண்டு கிரையம் பெற்ற சொத்து. கடந்த 1999-ஆம் ஆண்டு அரசு நிலம், ரயில்வேக்கு சொந்தமானது) என்று கூறி வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக மாற்றியுள்ளனர். இதில் சுமார் 40 ஏக்கர் பூமி இதே பாேல் உள்ளது. இந்த பத்திரங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பரிவர்த்தனைகள் மற்றும் பலர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். தற்போது இந்த நிலங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும் உள்ளாட்சி
நிர்வாகத்திற்கு முறையாக இதுநாள் வரை வரி செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த சிக்லை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.