காரில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்டவிரோதம்
உங்கள் காரில் யாருக்காவது லிஃப்ட் கொடுத்தால் அது சட்டவிரோதம் என்பதும் உங்க லைசென்ஸ் பறிபோகும் என்பதும் உங்களுக்கு தெரியுமா.,
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன.
பல விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை.
தற்போது கார் உரிமையாளர் ஒருவர், தான் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப் பட்டிருக்கிறார்.
மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர் கடந்த மாதம் 18ம் தேதி காலை தன் காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல பஸ்கள் மிகவும் தாமதமாக வந்தன.
இதனால் அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண்டிருந்தனர்.
அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். இருவர் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர்… காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் தனது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் நிதின் நாயர் மூவரையும் தன் காரில் ஏற்றி கொண்டார்.
சிறிது தூரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி காரை நிறுத்தியுள்ளார்.
உடன் பயணிப்பவர்கள் யார்? என்ற கேள்வியை போலீஸ் அதிகாரி கேட்க, அவர்களுக்கு தான் லிஃப்ட் கொடுத்ததாக நிதின் நாயர் கூறியிருக்கிறார்.
உடனே, அந்த போலீஸ் அதிகாரி நிதின் நாயரின் லைசென்ஸை பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதிப்பதற்கான ரசீது ஒன்றை மளமளவென எழுதி, நிதின் நாயரிடம் ஒப்படைத்து விட்டார்.
எதற்காக இந்த தண்டனை? என்று போலீஸ் அதிகாரியிடமே கேட்டதற்கு ”தெரியாத நபர்களுக்கு ‘லிப்ட்’ கொடுப்பது சட்டவிரோதம்” என்று பதிலளித்தார் அந்த அதிகாரி .
மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற நாயரிடம், இந்தியார் வாகன சட்டம் 66/1988 (Section 66 in The Motor Vehicles Act, 1988 Necessity for permits) ன்கீழ் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் கோர்ட்டிற்கு சென்று அபராதம் கட்டினால்தான் லைசென்ஸை திரும்ப பெற வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
தனக்குதெரிந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டபோதுதான் தனியார் வாகனத்தில் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது தவறு என்ற சட்டம் உண்மையிலேயே இருப்பது அவருக்குத் தெரியவந்தது.
பின்னர் கோர்ட்டுக்குச் சென்று நீதிபதி முன் “குற்றத்தை” ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் மிகவும் மனம் நொந்துபோன நிதின் நாயர், இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாரேனும் விபத்தில் சிக்கிக்கிடந்தால்கூட, யாரும் உதவி செய்ய முன்வர மட்டார்கள் என பேஸ்புக் பக்கத்தின் தனது குமுறலை கொட்டியுள்ளார்.
எந்த ஒரு நபரும் தனது தனியார் வாகனத்தை பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் (Indian Motor Vehicle Act ) விதிகள் இருப்பது உண்மைதான்.
இந்த சட்டத்திற்கு 2 காரணங்கள் உள்ளன.
முதல்காரணம், வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் பெர்மிட் இல்லாமல் தங்கள் சொந்த வாகனங்களை, டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்டவிரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.
இரண்டாவது காரணம், வாகன உரிமையாளரின் பாதுகாப்பு.
தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பதால், முன்பின் தெரியாத அந்த நபரால், வாகனத்தின் உரிமையாளருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எனவே நண்பர்களே இப்படி ஒரு சட்டம் இருப்பதை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Leave a Comment