பட்டா என்றால் என்ன?
பட்டா என்றால் என்ன? அதன் வகைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ???
?பட்டா??
பட்டா என்பது , ஒரு நிலம் இன்னார் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று.
?பட்டா என்பது நில உரிமை ஆவணம், அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.
?பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்த்தீரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
பட்டா வகைகள் ???
யூ.டி.ஆர் பட்டா
( UDR –Updating Data Registry )
??மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைப்படுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து ( வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒழுங்குபடுத்தும் வேலையை போல் ) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யூ.டி.ஆர் பட்டா ( Updating Data Register ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
நத்தம் நிலவரி திட்டம்
??யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைக்காரன் காலத்தில்லேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு தான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
??தோராய பட்டா என்பது நந்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
??நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் (பிழைகள், தவறுகள், இருக்கலாம் ) அதில் எதாவது சிக்கல்கள், பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்கு கால அவகாசம் கொடுத்தும் கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா.
??முழுமையான விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்.
தூய பட்டா :
??நத்தம் நிலத்திற்கு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும், சாலை, குளம், பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல் படுத்தப்படும்போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூய பட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.
ஏ.டி கண்டிசன் பட்டா
??ஏ.டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பார்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி கண்டிசன் பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்ககூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக விருந்தால் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்.
நில ஒப்படை பட்டா ( டி-கார்டு கண்டிசன் பட்டா )??
??வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். முன்னாள் ராணுவ வீரர்கள், பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற்றவர்கள், திருநங்கைகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி-கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
டி.எஸ்.எல்.ஆர் பட்டா
??டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளின் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கப்படும் ஆவணகளில் இருந்து பொது மக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள். இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும்.
தூசி பட்டா
??கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கப்படுகிறது.
அரசு நிலத்தின்மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள்,கனிதரும் மரங்கள்) மரங்கள் அனுபவிக்க பராமரித்து கொள்ள, மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.
கூட்டு பட்டா
??தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூட்டுபட்டா, கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB-சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது,
தனி பட்டா
??தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும். மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப்டிவிசன் செய்யப்பட்டு இருக்கும்.பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
Leave a Comment