நிலத் தகராறு & பட்டா மாறுதல்
நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,உங்கள் நண்பர்களுக்குப் பரப்புங்கள். (Land Disputes) வழக்கு நிலுவையில் இருக்கும் போதுபட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் – W. […]
அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது…
அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7-ல் சொல்லப்பட்டதைப் பார்ப்போம். அசையும், […]
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற…
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகள்:- சமூக ஆர்வலர்கள், முதலில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைச் சரியாக அடையாளம் காண வேண்டும். அதாவது, ஆக்கிரமிப்பு எந்த சர்வே எண்களில் உள்ளது? எவ்வளவு பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது? யார் யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்? ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடமானது, நீர் நிலைகளில் வாய்க்கால், குளம், குட்டை, ஏரி, மதகு, ஆறு உட்பட எந்த வகைப்பாட்டில் உள்ளது…. […]
பத்திரங்களில் குறிப்பிடப்படும் சொற்களுக்கான விளக்கங்கள்.
பொதுவாக வீடுகள், மனைகள் அல்லது இதர வகை நிலங்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை பிறரிடம் படிப்பதற்காக தந்து சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்கின்றனர். ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் சொற்கள் அல்லது வாசகங்கள் பலருக்கும் எளிதில் புரிவதில்லை. ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கான விளக்கங்கள் வருமாறு : கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி. கிராம தானம்: கிராமத்தின் பொது […]
FIR முதல் தகவல் அறிக்கை (F.I.R)
IR முதல் தகவல் அறிக்கை (F.I.R) – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! முதல் தகவல் அறிக்கை (FIR – First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு (CRPC) 154 இது பற்றிக் கூறுகிறது. புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் […]
சைபர் குற்றவாளிகள் தந்திரங்கள்.
சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். (அனைவரும் அவசியம் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு) 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும். 2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) […]
கட்டட அனுமதி சட்ட விதிகள்
ஒரு நகராட்சியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கும், புதுப்பிக்கப்படும் கட்டடத்திற்கும் – நகராட்சியிடம் – கட்டட பணிகளை துவங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதிகள் 197, 198, 199 – இவ்விண்ணப்பங்கள் குறித்த வழிமுறைகளை கூறுகின்றன. அவ்வாறு முறையாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த முடிவினை செயல் அதிகாரி (இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையர்) – 30 நாட்களுக்குள் – எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். இது […]
தான பத்திரம் & தான செட்டில்மெண்ட்
தான பத்திரம் & தான* செட்டில்மெண்ட்……. சிறு பார்வை.. தான பத்திரம்……. தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும். இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க […]
கைதிகளுக்கு உரிமைகள் உண்டா?
கைது செய்யப்படும் நபர்களுக்கு* உரிமைகள் உண்டா..? கைது – ஏன்? எதற்கு? எப்படி?…… பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம். இது ஒரு எளிய உதாரணம்தான்! […]
காவல் நிலையம் – சட்டம் அறிவோம்
நீங்கள் காவல் நிலையத்திற்குதினமும் தொடர்ந்து செல்வீர்களா ?….. இந்த சட்டத்தை தெரிந்து வைத்துகொள்ளுங்கள் ……….. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம். காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் (Gr. II. PC) சேர்த்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு […]