மாவட்ட ஆட்சித் தலைவர் – பொறுப்புகளும் கடமைகளும்
இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படி “ஊராட்சிகளின் ஆய்வாளராக” இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியரின் பொறுப்புகளும் கடமைகளும் பின்வருமாறு :-
ஒரு மாவட்டத்தின் ஆட்சியரே அந்த மாவட்டத்தின் “ஊராட்சிகளின் ஆய்வாளர்”ஆக இருக்கிறார்.
மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளான
1.கிராம ஊராட்சி
2.ஒன்றிய ஊராட்சி
3.மாவட்ட ஊராட்சி ஆகியவை தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளை ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
1.மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் உறுதிப்படுத்துதல் அதற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல்.
2.மக்களுக்கு கிராமசபை கூட்டங்கள்கான அறிவிப்புகள் உரிய காலத்தில் கொடுக்கப்படுவதையும் கிராம சபையில் மக்கள் இயற்றிய தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் கண்காணித்தல் மேலும் கிராம சபை கூட்டத்திற்கான சட்ட விதிமுறைகள் அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்துதல்.
3.ஒரு நிதியாண்டில் ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து பணிகளையும் விவரிக்கும் அறிக்கையான “நிர்வாக அறிக்கைகள்”ஆண்டுதோறும் முறையாக சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்தல்.
4.வரும் நிதியாண்டிற்க்கான நிதிநிலை அறிக்கைகளை கிராம ஊராட்சி உட்பட மூன்று அடுக்கு ஊராட்சிகள் அனைத்தும் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்துதல்.
5.ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் தங்கள் பகுதியில் வளர்ச்சிக்காக திட்டமிடும்”வளர்ச்சி திட்டங்கள்” உரிய காலத்தில் தயாரிக்கப்படுவதையும் அத்திட்ட பணிகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
6.மாதாந்திர மன்ற கூட்டங்கள் தொடர்ந்து முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல்.
7.ஊராட்சி நிர்வாக பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்ட பணிகள் ஆகியவை முறையாக நடைபெறுகின்றன என மக்களே நேரடியாக ஆய்வு செய்யும் முறையான “சமூகத்தணிக்கை”ஊராட்சி மூலம் முறையாக நடைபெறுகின்றனவா என கண்காணித்தல்.
8.ஊராட்சி நிர்வாக பணிகளை அரசு ஆய்வு செய்யும் போது அதாவது தணிக்கை செய்யும் போது கண்டுபிடிக்கப்படும்
பணி குறைபாடுகள்,தணிக்கைத் தடைகளாக பதிவு செய்யப்படும் தடைகளை உரிய காலத்தில் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.
9.ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு துறைகளான கிராம நிர்வாக அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் நூலகங்கள்,கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடை ஆகியவை இணைந்து பணியாற்றுவது உறுதிப்படுத்துதல்.
10.ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தல்.
No subject for TNEB administration, collector response?