உங்கள் கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் படிவங்கள் என்னென்ன ?
அரசாணை எண் 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்26.03.1997 ன் படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-31 வரையிலான படிவங்கள் பராமாிக்கப்பட வேண்டும்.
படிவம் எண் -1 வீட்டு வாி கேட்புத் தொகைக்கான அறிவுப்பு.
படிவம் எண் -2 வீட்டு வாி இரசீதுகள்
படிவம் எண் -3 வீட்டு வாி (நிலுவை தொகை நடப்பு வாி்த்தொகை)
படிவம் எண் -4 தொழில் வாி பற்றுச்சீட்டு
படிவம் எண் -5 தொழில் வாி பற்றுச்சீட்டு( நிலுவை தொகை நடப்பு வாி்த்தொகை)
படிவம் எண் -6 பல்வகை பற்றுச்சீட்டு
படிவம் எண் – 7 வாிகள் மற்றும் பல்வகை இனங்கனில் வசூல் பதிவேடு
படிவம் எண் -8 மானியங்களில் ,ஒதுக்கப்பட்ட இனங்கனில் வசூல் பதிவேடு
படிவம் எண் -9 கிராம ஊராட்சி நிதி சிட்டா
படிவம் எண் -10 பல்வகை வரவு வசூல் நிலுவை பதிவேடு
படிவம் எண் -11 ரொக்கப் புத்தகம் (கிராம ஊராட்சி நிதிக் கணக்கு)
படிவம் எண் -12 திருப்பி வசூலிக்கதக்க முன் பணங்கள் பதிவேடு
படிவம் எண் -13 வகைப்பாடு செய்யப்பட்ட தொகை செலுத்தங்கள் பதிவேடு.
படிவம் எண் -14 பற்றொப்ப பதிவேடு
படிவம் எண் -15 மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு
படிவம் எண் -16 கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய பதிவேடு.
படிவம் எண் -17 பராமாிப்பு பதிவேடு ஊராட்சியில் சொத்துக்கள் பராமாிப்பு செலவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்
படிவம் எண் -18 ஊராட்சியில் வாங்கப்படும் பொருட்களின் விபரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்
படிவம் எண் -19 செலவுச்சீட்டு இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
படிவம் எண் -20 தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்பு பதிவேடு ,அளவுச் சுவடிகள் ,ஒப்பந்த படிவங்கள் முதலியவை.
படிவம் எண் -21 விற்பனைப் பதிவேடு (முடங்கு பொருள் பதிவேடு)
படிவம் எண் -22 கட்டுமானப் பொருள்கள் குறித்த பதிவேமு
படிவம் எண் -23 ரொக்கப்புத்தகம் ( மானியங்களின் வரவினங்கள்) பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
படிவம் எண் -24 ரொக்கப்புத்தகம் ( அளிக்கப்பட்ட மானியங்கள்) பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
படிவம் எண் -25 மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு(அளிக்கப்பட்ட மானியங்கள் ) பதிவேடு
படிவம் எண் -26 ரொக்கப் பதிவேடு புத்தகம் (திட்ட நிதி)
படிவம் எண் -27 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச்செலவுகள்(திட்ட நிதி கணக்கு)
படிவம் எண் -28 திட்ட பணிகள் பதிவேடு மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு(அளிக்கப்பட்ட மானியங்கள் ) பதிவேடு
படிவம் எண் -29 திட்டத்தின் மூலம் பயன் அடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு
படிவம் எண் -30 ஆய்வாளர்க்கு அனுப்ப வேண்டிய மூன்று வகை கணக்கு வரவு செலவு குறித்த மாதாந்திர விபரம்
படிவம் எண் -31சென்ற ஆண்டின் வரவு செலவும் -எதிர் வரும் ஆண்டிற்னு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு-செலவு விபரம் குறிக்கப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில், மேலே குறிப்பிட்டுள்ள, அனைத்து படிவம் மற்றும் பதிவெடுகளை, பொது மக்கள் மத்தியில் பார்வைக்காக, கண்டிப்பாக வைக்க பட வேண்டும்.
நன்றி….
Leave a Comment