பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு
பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு குறித்து நிலையாணை எண் 238 ல் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையாணை எண் 9.3.2005 ல் திருத்தம் செய்து பதிவுத்துறை தலைவர் Letter No. 55580/சி1/2004 ன்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவில் ” No document shall be accepted for registration, where the registering officer has been impleaded as a defendant /Respondent and restrained by the court not to register any document in respect of any property. In such cases the registering officer, if insisted by the registrant shall return the document noting the factor order of the court in the check slip என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல 15.09.2010 தேதியில் பதிவுத்துறை தலைவர் Circular No 33/சி1/2010 ல், ஒருவர் தாக்கல் செய்யும் ஆவணப் பதிவு குறித்து, ஏற்கனவே தடை மனு அளிக்கப்பட்டு தடைமனுதாரர் சொத்து தன்னுடையது என்பதற்கான ஆதாரங்களை தெளிவாக சமர்பித்திருந்தால் அச்சொத்து குறித்து வேறு ஒருவரால் ஆவணம் தாக்கல் செய்யப்படும்போது இருவரையும் விசாரித்து சொத்தின் உரிமை குறித்து சார்பதிவாளர் மனநிறைவு அடைந்து விசாரணையின் முடிவினை வெளியிட்ட பின்னரே பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான ஆதாரங்களை தாக்கல் செய்தாலோ, சொத்தின் உரிமையை நிரூபிக்கவில்லை என்றாலோ ஆவணப் பதிவுக்கு மறுத்து அதனை பதிவு செய்யாமல் திரும்ப கொடுத்து விட வேண்டும் என்றும், விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலே கண்ட இரு சுற்றறிக்கைகளையும் சுட்டிக்காட்டி 5.10.2018 தேதியில் தடைமனுவை எப்படி பரிசீலிக்க வேண்டும் என்று கூறி ந. க. எண். 39708/சி1/2018 என்ற சுற்றறிக்கையை புதிதாக பிறப்பித்துள்ளார். மேற்கண்ட சுற்றறிக்கையின்படியே தடை மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.
Leave a Comment