நில மோசடி புகார்கள் – சட்டப்பிரிவுகள்
நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய “இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code )”- சட்டப்பிரிவுகள் ⚖
- அடுத்தவர் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவனது அசல் நிலப் பத்திரத்தை வாங்கி, தனது சொத்தென்று சொல்லி விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- ஒருவர் பிழைப்புக்காக சில வருடங்கள் வெளியூர் சென்றிருக்கையில், அவரது இடத்தைத் தனக்கு சொந்தமாக்கி விட்டவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
- ஒரு இடத்தை இரண்டு நபர்களிடம் விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- ஒரே வீட்டில் அண்ணனது பத்திரத்தை திருடி, அவரது சொத்தை விற்ற தம்பிக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- தனது இடத்தில் வீடு கட்டுகையில், பக்கத்தில் உள்ள இன்னொருவனின் இடத்தில் சில அடி தூரங்களை ஆக்கிரமித்துக் கட்டுமானம் செய்தவருக்கு- 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 441, 447 IPC.
- தனது இடத்தை விற்ற போது, பக்கத்திலுள்ள இன்னொருவரின் நிலத்தையும் சேர்த்து விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
- எல்லைக் கல்லைப் பிடுங்கிவிட்டு, அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்தவருக்கு- 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 441, 447, 489 IPC.
எனது வீட்டை இரண்டு வருடத்திற்கு கிரய அக்ரிமெண்ட் போட்டு பதிவு செய்து ஐந்து லட்சம் கடன் வாங்கியுள்ளேன்.வட்டியை மாதா மாதம் phonepe மூலமாக அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளேன்.தற்சமயம் வீட்டை கிரயம் செய்து கொடுக்கச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.தயவு செய்து விளக்கம் கொடுங்கள்.
எனது பக்கத்து இடத்தில் உள்ளவர் 60 அடி என்னுடையது சேர்த்து கட்டி விட்டார் நான் வெளியூரில் உள்ள போது பணம் தருவதாகச் சொல்லி பத்து வருடமாக என்னை ஏமாற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் அந்த பணத்தை நான் எப்படி வசூல் செய்ய வேண்டும் அதற்கான ஆவணங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது நன்றி ஐயா