RTI act 2005 sections
Rti Act – 2005 இன் பிரிவு10 பிரித்தளித்தல் என்ற தலைப்பில் (1) தகவலினைப் பெறுவதற்காக கோரிக்கை ஒன்று வெளியிடப்படுவதில் இருந்து விலக்களிக்கப் பெற்றிருக்கிற தகவலுடன் அது தொடர்புடையதாய் இருக்கிறது என்ற காரணத்தாலேயே தகவல் அழங்க மறுக்கப்படுகிறவிடத்து இந்த சட்டத்தின்பிரிவுகளில் எது எவ்வாறு அடங்கியிருப்பினும் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவல் அடங்கியுள்ள பகுதி எதிலிருந்தும் நியாயமான முறையில் பிரித்தளிக்கக்கூடிய தகவல் எதுவும் அளிக்கப்படலாம்
பிரிவு. 10 (2) (1) ஆம் உட்பிரிவின்படி பதிவுருவின் பகுதியினை பெறுவதற்கு அனுமதி வழங்கப் பெற்றிருக்கிறவிடத்து மையப் பொதுத்தகவல் அலுவலர் அல்லது மாநில பொதுத் தகவல் அலுவலர்
பிரிவு. 10 (2)(அ) வெளியிடுவதில் இருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுரு பிரிக்கப்பட்டபின் கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்று தெரிவித்து
- (2) (ஆ) பொருண்மை பற்றிய இன்றியமையாத வினாஎதன் பேரிலுமான முடிவுகள் எவையும் உள்ளடங்களாக அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருட்பாட்டை சுட்டுகின்ற முடிவுகளின் பேரிலான காரணங்களைத்தெரிவித்து
- (2) (இ) அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவிப்பெயரினை தெரிவித்து
- (2) (ஈ) அவரால கணக்கிடப்பட்ட கட்டணங்களை வைப்பீடு செய்யுமாறு விண்ணப்பதாரருக்கு கோரப்பட்ட கட்டணத் தொகையினை தெரிவித்து அறிவுத்தல் செய்யப்பட வேண்டும்
- (2) (உ) 19 (1) வது பிரிவில் குறித்துரைக்கப்பட்ட பணிமூப்பு அலுவலர் அல்லது மைய தகவல் ஆணையம் அல்லது நேர்வுக்கேற்ப ந்மாநிலத்தகவல் ஆணையம் பற்றிய விபரங்கள் உள்ளடங்கலாக தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை மறு ஆய்வு செய்வதற்கு அவருக்குள்ள உரிமைகள் , விதிக்கப்பட்ட கட்டணத்தொகை , தகவல் பெற வகை செய்யப்பட்ட முறை கால வரம்பு நடவடிக்கை மற்றும் தகவல் பெறக்கூடிய பிற முறை ஆகியவை தெரிவித்து விணப்பதாரருக்கு அறிப்விப்பு ஒன்றை அளித்தல் வேண்டும்
Leave a Comment