நமது முன்னோர்கள் வகுத்த நிலங்களின் வகைகள் அறிவீரா??
- நிலம் (பொதுவாக சொல்வது)
- கல்லாங்குத்து நிலம் – கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்
- செம்பாட்டு நிலம் – செம்மண் நிலம்
- மேய்ச்சல் நிலம் – கால்நடைகள் மேய்யும் நிலம்
- வட்டகை நிலம் – சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம்
- அசும்பு — வழுக்கு நிலம்
- அடிசிற்புறம் – உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம்
- அடுத்தூண் – பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்
- அறப்புறம் – தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம்
- ஆற்றுப்படுகை – நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம்
- இதை – புன்செய் சாகுபடிக்கான நிலம்
- இறையிலி – வரி நீக்கப்பட்ட நிலம்
- உவர்நீலம் – உப்புத்தன்மை கொண்ட நிலம்
- உழவுகாடு – உழவுக்கேற்ற நிலம்
- உள்ளடிநிலம் – ஏரியை அடுத்துள்ள நிலம்
- ஊர்மானியம் – ஊரின் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட வரியில்லா நிலம்
- ஊரிருக்கை – ஊரைச் சார்ந்த நிலம்
- ஒருபோகு – ஒரே தன்மையை உடைய நிலம்
- ஓராண்காணி – ஒருவனுக்கே உரிய நிலம்
- கடவுளரிடன் – கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
- கடறு – பாலை நிலம்
- கடுந்தரை – இறுகிய நிலம்
- கரம்பு – சாகுபடி செய்யாத நிலம்
- கரம்பை – வறண்ட களிமண் நிலம்
- கழனி / காணி – நன்செய் நிலம்
- களர் – சேற்று நிலம்
- காணியாட்சி – உரிமை நிலம்
- காவிதிப்புரவு – அரசனால் காவிதைப்பட்டம் பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
- கீழ்மடை – மடைநீர் இறுதியாகச் சென்று பாயும் நிலம்
- கொத்துக்காடு – கொத்திப் பயிரிடுவதற்குரிய நிலம்
- கொல்லை – முல்லை நிலம்
- சாந்துப்புறம் – அரசனுக்குச் சந்தனம் கொடுத்து வருவதற்க்காக விடப்பட்ட இறையிலி நிலம்
- சுரம் – வறண்ட பாலை நிலம்
- சுவாஸ்தியம் – பரம்பரையாக வரும் நிலம்
- செய்கால் – சாகுபடி நிலம்
- செய்கால்கரம்பு – தரிசாக விடப்பட்ட நிலம்
- செவல்காடு – செம்மண் நிலம்
- தகர் – மேட்டு நிலம்
- தண்பணை – மருத நிலம்
- தரிசு – சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் நிலம்
- திருத்து – நன்செய் நிலம்
- தினைப்புனம் – தினை வகைகள் விளையும் நிலம்
- தோட்டக்கால் – கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்ப்டௌம் நிலம்
- நத்தம் – கிராமத்தில் உள்ள மனை நிலம்
- நதீமாதுருகம் – ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்
- நீர்நிலம் – நன்செய் நிலம்
- நீராரம்பம் – நீர்பாசன வசதியுள்ள நிலம்
- பங்குக்காணி – கூட்டுப்பாங்கான நிலம்
- படிப்புறம் – கோயில் அருச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்
- பயிரிலி – தரிசு நிலம்
- பழந்தரை – நீண்ட நாள் சாகுபடியில் இருந்ததால் வளம் குன்றிய நிலம்
- பள்ளக்காடு – தாழ்வான புன்செய் நிலம்
- பற்றுக்கட்டு – குடியுரிமை நிலம்
- பாதவக்காணி – கோயில் பணியாளர்களுக்குப் படியாகத் தரப்படும் நிலம்
- பார் – கடினமான நிலம்
- பாழ்நிலம் – விளைச்சலுக்கு உதவாத நிலம்
- பிரமதாயம் – பிராமணருக்குத் தரப்படும் மானிய நிலம்
- புரவு – அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்
- புழுதிக்காடு – புழுதியாக உழுத புன்செய் நிலம்
- புழுதிபாடு – தரிசு நிலம்
- புறணி – முல்லை நிலம்
- புறம் – இறையிலி நிலம்
- புறம்போக்கு – சாகுபடிக்கு ஏற்றதல்லாத அல்லது பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட தீர்வை விதிக்கப்படாத நிலம்
- புறவு – முல்லை நிலம்
- புன்செய் – மழை நீரைக் கொண்டு புன்செய்ப்பயிர் சாகுபடி செய்யும் நிலம்
- புன்புலம் – தரிசு நிலம்
- புன்னிலம் – வறண்ட, பயனற்ற நிலம்
- பூசாவிருத்தி – கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானிய நிலம்
- பூமி – தரை (நிலம்)
- பொதுநிலம் – பிரிவினை செய்யப்படாத நிலம்
- போடுகால் – தரிசு நிலம்
- மஞ்சள்காணி – பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகத் தரும் நிலம்
- மடப்புறம் – மடத்திற்க்கு விடப்பட்ட மானிய நிலம்
- மனை – வீடு கட்டுவதற்க்கான நிலம்
- மா – நிலம்
- மானாவாரி – மழைநீரால் சாகுபடி செய்யப்படும் நிலம்
- மானியம் – கோயில், நிருவாகம், அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்
- முதைப்புனம் – நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்
- மெல்லம்புலம்பு – நெய்தல் நிலம்
- மென்பால் – மருத நிலம் / நெய்தல் நிலம்
- மேட்டாங்காடு – புன்செய்ப் பயிர்கள் விளையும் மேட்டுப் பாங்கான நிலம்
- வறுநிலம் – பாழ் நிலம்
- வறும்புனம் – அறுவடைக்குப் பிறகு தரிசாக உள்ள புன்செய் நிலம்
- வன்பார் – இறுகிய பாறை நிலம்
- வன்பால் – பாலை நிலம்
- வானம்பார்த்த பூமி – மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்
- விடுநிலம் – தரிசு நிலம்
- வித்துப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்
- விதைப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்
- விருத்தி – ஒருவருடைய பிழைப்புக்கு மானியமாக விடப்பட்ட நிலம்
- விளைநிலம் – பயிர் செய்யும் வளமுடைய நிலம்
- வெங்கார் மண் – சூரிய வெப்பத்தால் சூடேறிய நிலம்
- வெட்டுக்காடு – திருத்தியமைத்த காட்டு நிலம்
முன்னோர்களின் பேரறிவுக்கு இதனை விட பெரும் சான்று வேண்டுமா???
Leave a Comment