கூட்டு பட்டா என்றால் என்ன?
கூட்டு பட்டாவில் நீங்கள் வாங்கும் மனை இருக்கிறதா?….
கவனம்…. சர்வே சிக்கல்கள்…
பட்டா, தனிபட்டா, கூட்டுபட்டா என என்று இரண்டு வகையாக இருக்கிறது.
தனிபட்டாவில் ஒரே ஒரு நபர் பெயர் மட்டும் இருக்கும் அதில் தனி உட்பிரிவு சர்வே எண்ணும் தனி பட்டா எண்ணும் இருக்கும்.
கூட்டுபட்டாவில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் பெயர் இருக்கும். தனிஉட்பிரிவு சர்வே எண் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சர்வே எண் ஒரே பட்டா எண் இருக்கும்.
.கூட்டு பட்டாவில் இருக்கும் வீட்டு மனைகளை வாங்கும் போது சர்வே பிழை இருக்கிறதா என்று அதிக அளவில் கவனம் எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
1985 களில் தமிழகம் முழுக்க அளந்து சர்வே செய்யும் போது இப்போது இருப்பது போன்ற டிஜிட்டல் சர்வே எல்லாம் கிடையாது.அதனால் மிக துல்லியமான அளவுகள் நிலங்களில் கிடையாது.
ஒரு ஏக்கர் நிலத்தை அளந்தால் கூடுதலாகவோ குறைவோ 5செண்ட் வரை
இருக்கலாம்.மேற்படி நிலங்கள் விவசாய நிலங்களாக இருக்கும் பட்சத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை.
ஆனால் வீட்டு மனையாக மாறும் பட்சத்தில் சர்வே பிழை இருக்கும் இடங்களில் பிரச்சினைகள் எழும்புகிறது.
பட்டாவிலும் புல வரைபடத்திலும் ஒரு ஏக்கர் (100 செண்ட்)இருந்து களத்தில் 97 செண்ட் இருந்தால் சர்வேயர் புல வரைபடத்தில் மனைகளை பிரிக்கும்போது சரியாக இருபது மனைகள் வருவதாக வைத்து கொள்வோம்.
அந்த படத்தை வைத்து களத்தில் இடத்தை அளந்து கல் போட்டு பிரித்தால் 3செண்டு களத்தில் குறைவதால் 19 வீட்டு மனைகள் மட்டும் போட முடியும்.
இதற்கு அப்படியே நேர்மறையாக வரைபடத்தில் ஒரு ஏக்கர் இருந்து களத்தில் ஒரு ஏக்கர் மூன்று செண்ட் இருந்தால் வரைபடத்தில் 20மனைகளும் களத்தில் 21 மனைகளும் கூடுதலாக வரும்.
19 வீட்டுமனை என குறைவாக இருக்கும்பட்சத்தில் அரசு ஆவணங்களில் சர்வேயர் எதனையும் திருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மனைபிரிவு அமைப்பவருக்குதான் ஒரு மனை இழப்பு.
21வீட்டுமனை என அதிகமாக இருக்கும்பட்சத்தில் அரசுஆவணங்களில் இருப்பதை தாண்டி அதிமாக களத்தில் நிலம் இருப்பதை உபரி நிலம் என்று குறித்து விடுவர்.
அதற்கு பட்டா வழங்கமாட்டார்கள். சார்பதிவகத்தில் பத்திரமெல்லாம் செய்வார்கள்.இடம் வாங்கிய பிறகு பட்டா வாங்க நடையாய் நடக்க வேண்டும்.
சில இடங்களில் உபரி நிலத்தில் வரும் வீட்டுமனைதாரர்கள் திறமையாக கூட்டுபட்டாவில் தன் பெயரை சேர்த்துவிடுவார்கள்..
கூட்டுபட்டாவில் பெயர் இருக்கின்றது என்று மனையை வாங்கிவிட வேண்டாம்
பிறகு உங்கள் பெயரை கூட்டுபட்டாவில் ஏற்றமாட்டார்கள்.
மேற்படி கூட்டுபட்டாவில் இருக்கும் சொத்துக்களை வாங்க விரும்பினால் விற்பனையாளரிடம் தனிபட்டா வாங்கி தர சொல்லுங்கள்.அதன் பிறகு நீங்கள் கிரய பத்திரம் போடுவது நல்லது.
அல்லது முன்கூட்டியே அரசு சர்வேயரிடம் இடத்தை காட்டி கலந்தாலோசித்து உபரி நில சிக்கல்கள் ஏதாவது இருக்கிறதா ஆலோசனை பெற்று கிரயம் செய்யவும்.
நன்றி….
Leave a Comment