ஆவணங்கள் பதிவு செய்யும் போது
ஆவணங்கள் பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க தேவையில்லை.
பொதுவாக நாம் ஆவணங்கள் பதிவு செய்யும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என நம்மை வற்புறுத்துவார்.
மழை, வெயில், திருட்டு, மற்றும் காணாமல் போன காரணத்தினால் தொலைத்த அந்த ஆவணத்தை மீண்டும் நகலெடுத்து சமர்ப்பித்தாலும் அதனை சார்பதிவாளர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
அதற்காக நாம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் அலைந்து திரிந்து FIR பதிவு செய்து அல்லது காவல்துறையால் வழங்கப்படும் Not Traceable Certificate-யை பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே ஆவணத்தை பதிவு செய்வார்.
இதனால் நமக்கு தேவையற்ற மன உளைச்சலும், கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.
இதனைப் போக்குவதற்கு நமது சென்னை உயர் நீதிமன்ற (#High_Court) மதுரை கிளை நீதிபதி அவர்கள் சமீபத்தில் “Sivanadiyan Vs Registration Dept, Pudukkottai”எனும் வழக்கில், இந்திய பதிவு சட்டத்தில் (#Indian_Registration_Act) ஒரு ஆவணத்தை பதிவு செய்யும்போது பதிவு செய்யும் அலுவலரிடம் அசல் கவனத்தை காண்பிக்க வேண்டும் என்ற குறிப்பிட்டு சட்டப்பிரிவு ஏதும் இல்லாதபோது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அசல் ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வலியுறுத்தக் கூடாது_ என (W.P.(MD)No.19745 of 2020) 11.02.2021 அன்று உத்தரவிட்டுள்ளது.
Leave a Comment